ADDED : பிப் 15, 2024 10:21 PM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த தொரவி கிராமத்தில் மனோரஞ்சிதம், சம்பங்கி மகளிர் சுய உதவிக்குழுக்கள் துவங்கி 25ம் ஆண்டுகள் ஆகிறது.
அதனையொட்டி நடந்த வெள்ளி விழாவிற்கு, தொழிலதிபர் சுப்ரமணி தலைமை தாங்கி, குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து பேசினார். ஒன்றிய கவுன்சிலர் ராஜாம்பாள் சுப்ரமணி, சிற்றுாராட்சிகள் சங்க தலைவர் சங்கர் முன்னிலை வகித்தனர். மகளிர் கூட்டமைப்பு தலைவி ரோசி வரவேற்றார்.
கூட்டத்தில், விழுப்புரம் கல்விக்கேந்திரா இயக்குனர் சின்னப்பன், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மோரிஸ் ஆகியோர் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு நினைவுப் பரிசு வழங்கினார்.
கல்விக்கேந்திரா பொருளாளர் பிரகாச ராஜா, திட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயராணி, பயிற்சி ஒருங்கிணைப்பாளர்கள் ராமு, கூட்டமைப்பு செயலாளர் ஜெயா, அருணாதேவி, அமுதா, களப்பணியாளர்கள் லட்சுமி, ஜான்சிராணி உட்பட பலர் பங்கேற்றனர். ஊக்குனர் சிவகாமி நன்றி கூறினார்.