நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி சூர்யா கல்லுாரியில் மாணவர்களுக்கான கருத்தரங்கு நடந்தது.
மின்னனுவியல் துறை சார்பில் நடந்த கருத்தரங்கிற்கு, கல்லுாரி நிர்வாகி விசாலாட்சி பொன்முடி தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
கல்லுாரி முதல்வர் சங்கர், துணை முதல்வர் ஜெகன் முன்னிலை வகித்தனர். துறை தலைவர் கிருபானந்தன் வரவேற்றார்.
ஐ.ஐ.சி., ஒருங்கிணைப் பாளர் பேராசிரியர் மனோசந்தர், 'வெற்றிகரமான கண்டுபிடிப்பாளர்களின் ஊக்கமளிக்கும் அமர்வு' தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
செஞ்சி டிராவல்லர் யு டியூப் சேனல் நிறுவ னர் தேவகுமார் முருகன் மாணவர்களுக்கு எதிர்கால வளர்ச்சி குறித்த கருத்துகளை கூறினார்.
ஒருங்கிணைப்பாளர் பாலபிரியன், கல்லுாரி துறை பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.