/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மகளிர் கல்லுாரியில் மாணவிகள் கருத்தரங்கு
/
மகளிர் கல்லுாரியில் மாணவிகள் கருத்தரங்கு
ADDED : ஜூலை 25, 2025 10:23 PM
விழுப்புரம்,; விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் 'தொடர்புகளின் எதிர்காலம் : போக்குகள் மற்றும் தொழில்நுட்பங்கள்' தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.
முதுகலை மற்றும் ஆங்கில ஆராய்ச்சி துறை சார்பில் நடந்த கருத்தரங்கிற்கு, ஆங்கில துறை தலைவர் சரண்யா தலைமை தாங்கினார். தொழில் அடிப்படைகளின் தலைமை நிர்வாக அதிகாரி, ஹஸ்ரத் பேகம், வளர்ந்து வரும் தகவல் தொடர்பு கருவிகள், தளங்கள் எதிர்கால பணியிடங்களை எவ்வாறு வடிவமைக்கிறது குறித்து விளக்கினார்.
இதில், ஆங்கிலம் மற்றும் ஜே.எம்.சி., துறை மாணவர்கள், உதவி துறை பேராசிரியர்கள் பங்கேற்றனர். ஆங்கில உதவி பேராசிரியை வைஷ்ணவி நன்றி கூறினார்.