/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தேனீ வளர்ப்பு குறித்த கருத்தரங்கம்
/
தேனீ வளர்ப்பு குறித்த கருத்தரங்கம்
ADDED : டிச 23, 2024 06:42 AM

திண்டிவனம்: திண்டிவனம் வேளாண் அறிவியல் நிலையத்தில் தேனீ வளர்ப்பு குறித்துஇரண்டு நாள் கருத்தரங்கம் நடந்தது.
திண்டிவனம், இறையனுாரில்உள்ள வேளாண் அறிவியல்நிலையத்தில் நேற்று முன்தினம் மாவட்ட அளவிலான தேனீ வளர்ப்பு கருத்தரங்கம் துவங்கியது. முதல் நாள் நடந்த கருத்தரங்கை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின்விரிவாக்க கல்வி இயக்குனர் முருகன் துவக்கி வைத்தார்.
பயிர் பாதுகாப்புமைய மாவட்ட வேளாண்மை துறை இணை இயக்குனர் ஈஸ்வரி, தோட்டக்கலைதுணை இயக்குனர் அன்பழகன், கரும்பு ஆராய்ச்சிநிலைய பேராசிரியர் துரைசாமி வாழ்த்துரை வழங்கினர்.தொடர்ந்து வல்லுனர்கள் தேனீ வளர்ப்பு குறித்து பேசினர்.
நேற்று காலை தேனீவளர்ப்பு செய்முறை விளக்கங்கள் நடந்தது.
நிறைவு விழாவிற்கு மரக்காணம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சரவணன் தலைமை தாங்கி பேசினார்.
இரண்டு நாள் கருத்தரங்கில் பங்கேற்ற விவசாயிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
கருத்தரங்கில் திட்ட ஒருங்கிணைப்பாளர் திருவரசன், பூச்சியியல் துறை பேராசிரியர்துரைசாமி, கல்யாணசுந்தரம், இணை பேராசிரியர் செந்தமிழ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.