/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
செஞ்சி பஸ் நிலைய கடைகள் ரூ.6.74 கோடிக்கு ஏலம்
/
செஞ்சி பஸ் நிலைய கடைகள் ரூ.6.74 கோடிக்கு ஏலம்
ADDED : ஜன 25, 2024 05:54 AM

செஞ்சி :L செஞ்சி பஸ்நிலையத்தில் உள்ள 15 கடைகள் 6.74 கோடிக்கு ஏலம் போனது.
செஞ்சி பஸ் நிலையத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள பஸ் நிலையத்தில் புதிதாக 36 கடைகள் கட்டி உள்ளனர். இதில் முதல் கட்டமாக நேற்று 14 கடைகள், ஒரு உணவகம் மற்றும் கழிவறைக்கு ஏலம் அறிவித்திருந்தனர். பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி தலைமையில் செயல் அலுவலர் செந்தில்குமார் ஏலத்தை நடத்தினார்.
மாலை 5 மணிவரை நடந்த ஏலத்தில் உணவகம் 29 லட்சம் ரூபாய்க்கும், 14 கடைகள் மொத்தம் 6 கோடியே 45 லட்சம் ரூபாய்க்கும் ஏலம் போனது. கழிவறையை ஏலம் கேட்க யாரும் முன்வராததால் ஏலத்தை ஒத்திவைத்தனர்.
இந்த ஏலத்தில் துணை சேர்மன் ராஜலட்சுமி செயல்மணி, பேரூராட்சி கவுன்சிலர்கள், பணியாளர்கள் உடன் இருந்தனர்.