/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மருத்துவக்கல்லுாரியில் சீனியர் டாக்டர்கள் 'எஸ்கேப்'; அறுவை சிகிச்சை நோயாளிகள் காத்து கிடப்பு சிகிச்சையளிக்கும் முதுகலை மாணவர்கள்

ADDED : மே 27, 2025 07:09 AM
முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை கடந்த 2010ம் ஆண்டு துவங்கப்பட்டது. இங்கு, பொதுமருத்துவம், அறுவை சிகிச்சை, குழந்தை மருத்துவம், புற்றுநோய், இதய சிகிச்சை, பிளாஸ்டிக் சர்ஜரி, ரத்த நாள அறுவை சிகிச்சை உள்ளிட்ட மருத்துவ பிரிவுகளில் மொத்தம் 1274 படுக்கை வசதி உள்ளது.
தினந்தோறும் 3000 முதல் 3500 பேர் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெறுகின்றனர். 600 முதல் 800 பேர் உள்நோயாளியாக தங்கி சிகிச்சை பெறுகின்றனர்.
இத்தகைய மருத்துவமனையில், புற நோயாளிகள் மற்றும் உள் நோயாளிகள் பிரிவுகளில் முதுகலை மருத்துவம் (எம்.டி./எம்.எஸ்.,) படிக்கும், முதுகலை மருத்துவமாணவர்களும், பயிற்சி டாக்டர்களும் சிகிச்சை அளிப்பதால் நோயாளிகள் சரியான சிகிச்சை கிடைக்காமல் அவதிக்கு ஆளாகின்றனர்.
ஒவ்வொறு சிறப்பு பிரிவிலும் உள்ள சீனியர் டாக்டர்கள், பேராசிரியர்கள் மருத்துவமனைக்கு சரியான நேரத்திற்கு வருவதில்லை.
சிலர் நேரத்திற்கு வந்தாலும், வார்டுகளுக்கு செல்லாமல், தங்களின் அலுவலக அறையிலே அமர்ந்து கொள்கின்றனர்.
பயிற்சி டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள் வார்டுக்கு சென்று அளிக்கும் தகவல்களை கேட்டு கொள்கின்றனர்.
இதனால் வார்டு மற்றும் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவுக்கு வரும் நோயாளிகள் முறையான சிகிச்சை பெற முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை பேராசிரியர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள் சரியாக கவனிக்காததால் நீண்ட நாட்களாக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு காத்துக் கிடக்கும் நிலை உள்ளது.
டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் சரியான நேரத்திற்கு வருகிறார்களா என்பதை கண்காணிக்கும் வருகை பதிவேடு முறையாக பராமரிக்கப்படுவதில்லை.
துறை பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை தட்டிக் கழிப்பதாலும், அவர்களுக்கு கீழ் பணி புரியும் ஜூனியர் டாக்டர்கள், பணியாளர்கள் சரிவர மருத்துவ பணி செய்யாததால் மருத்துவமனையில் பெரும் பிரச்சனைகள் உருவெடுத்துள்ளன.
எனவே மாவட்ட நிர்வாகமும், சம்பந்தப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனும் துரித நடவடிக்கை எடுத்து அனைத்து வார்டுகளிலும், டாக்டர்கள் நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்க வேண்டுமென பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.