ADDED : டிச 30, 2025 05:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி வடக்கு பைபாஸ், பாப்பனப்பட்டு, விழுப்புரம் அண்ணாமலை ஓட்டல் ஆகிய இடங்களில் மேம்பால பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பகுதியில் வாகனங்கள் சர்வீஸ் சாலையில் கடந்து செல்கின்றன.
கடந்த மாதத்தில் பெய்த தொடர் மழை காரணமாக சர்வீஸ் சாலைகள் சேதமடைந்து கற்கள் பெயர்ந்து காணப்பட்டன. இதனால் வாகன ஓட்டிகள் இப்பகுதியை கடக்க பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.
இதுகுறித்து விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா டில்லியில் நகாய் சேர்மன் சந்தோஷ் குமார் யாதவ் மற்றும் விழுப்புரம் நகாய் திட்ட இயக்குநர் வரதராஜன் ஆகியோரிடம் சர்வீஸ் சாலையை சீரமைக்க கோரிக்கை விடுத்திருந்தார்.
திட்ட இயக்குநர் வரதராஜன் துரித நடவடிக்கையின் பேரில் சர்வீஸ் சாலைகளை சீரமைத்து தார் சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

