/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சாலையில் கழிவுநீர் : மக்கள் அவதி
/
சாலையில் கழிவுநீர் : மக்கள் அவதி
ADDED : ஆக 18, 2025 01:03 AM

விழுப்புரம்; சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர்.
விழுப்புரம், வைகுண்டவாச பெருமாள் கோவில் எதிரில் உள்ள விஸ்வகர்மா தெருவில் ஏராளமான குடியிருப்புகளில் மக்கள் வசிக்கின்றனர்.
இப்பகுதி வழியாக, வைகுண்டவாச பெருமாள் கோவிலுக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில், இந்த தெருவில் கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும், கழிவுநீரால் துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
சாலையில் கழிவுநீர் வழிந்தோடுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.