/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் பெருந்திட்ட வளாக குளத்தில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம்

ADDED : டிச 23, 2025 06:18 AM

வி ழுப்புரம் கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில், மரங்கள், மூங்கில் புதர்களுடன் கூடிய குளம் உள்ளது. இந்த குளத்தைச் சுற்றிலும் மழை நீர் தேங்கும்படி கட்டமைக்கப்பட்டுள்ளது.
குளத்தின் அருகேயும், கலெக்டர் அலுவலகம் எதிரேயும் ஏராளமான மரங்கள் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த பெருந்திட்ட வளாக குளத்திலும், அதனருகே உள்ள பகுதியிலும் மழை நீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. கோடையிலும் வற்றாத வகையில் இந்த குளங்களில் மழை நீரும், அதனுடன் கழிவு நீரும் தேங்கி நிற்கிறது.
இந்த குளத்தில் தொடர்ந்து பெருந்திட்ட வளாக வெளியில் உள்ள கடைகளின் கழிவு நீர், விடப்படுவதால் கழிவுநீர் வெளியேற வழியின்றி, பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகளுடன் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது.
தற்போது குளத்திலும், அதனருகேயும் கருமை நிறத்தில் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. நீண்டகாலமாக பராமரிப்பின்றி கிடப்பதால், குப்பைகள் கொட்டியும், கழிவு நீரை விட்டும் வீணடித்து வருகின்றனர்.
இதனை கலெக்டர் ஆய்வு செய்து, கழிவுநீர் கலப்பையும், குப்பைகள் கொட்டுவதையும் தடுத்து நிறுத்தி பராமாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.