ADDED : பிப் 26, 2024 05:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: செஞ்சியில் 16 லட்சம் ரூபாய் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி துவங்கியது.
செஞ்சி அடுத்த கிருஷ்ணாபுரம் வ.உ.சி., நகர் தொடர்ச்சி தெருவில் 16.10 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக கழிவுநீர் கால்வாய் கட்டும் பணிக்கான பூமி பூஜை நடந்தது. பேரூராட்சி சேர்மன் மொக்தியார் தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் விஜயகுமார் முன்னிலை வகித்தார். அமைச்சர் மஸ்தான் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.
பேரூராட்சி துணைச் சேர்மன் ராஜலட்சுமி, கவுன்சிலர்கள் கார்த்திக், ஜான்பாஷா, சங்கர், அஞ்சலை நெடுஞ்செழியன், பொன்னம்பலம், தொண்டரணி பாஷா, வழக்கறிஞர் சந்திரன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

