/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மா.கம்யூ., மாநில செயலாளராக சண்முகம் தேர்வு
/
மா.கம்யூ., மாநில செயலாளராக சண்முகம் தேர்வு
ADDED : ஜன 06, 2025 06:50 AM

விழுப்புரம் : விழுப்புரத்தில் நடந்த மா.கம்யூ., மாநில மாநாட்டில் புதிய மாநில குழு தேர்வு செய்யப்பட்டது.
விழுப்புரம் ஆனந்தா மண்டபத்தில் மா.கம்யூ., கட்சியின் 24வது மாநில மாநாடு 3ம் தேதி தொடங்கியது. அரசியல் தலைமைக்குழு ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்காரத், அரசியல் தலைமை குழு உறுப்பினர்கள் பிருந்தா காரத், பேபி, ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலர் பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் வாசுகி உள்ளிட்டோர் பங்கேற்று, மாநாட்டு தீர்மானங்கள் குறித்து விவாதித்தனர்.
மாநாட்டு முடிவில், நேற்று மாலை, புதிய மாநில செயலர் சண்முகம் உள்ளிட்ட 80 பேர் கொண்ட புதிய மாநில குழு தேர்ந்தெடுத்தனர்.
புதிய மாநில செயலராக, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவராக உள்ள சண்முகம் தேர்ந்தெடுக்கப்பட்டதாக, மாநில செயலர் பாலகிருஷ்ணன் அறிவித்தார்.
பிற மாநில குழு உறுப்பினர்களும் அறிவிக்கப்பட்டனர். புதிய மாநில செயலாளராக தேர்வு செய்யப்பட்ட சண்முகம் நிறைவுரை ஆற்றினார்.
ஜி.ராமகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர் வாசுகி, மாநிலக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், எம்.பி., சச்சிதானந்தம், எம்.எல்.ஏ.,க்கள் நாகை மாலி, சின்னதுரை, மாநில செயற்குழு உறுப்பினர்கள் பாலபாரதி, ரவீந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ., ராமமூர்த்தி, விழுப்புரம் மாவட்ட செயலர் சுப்பரமணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

