ADDED : நவ 17, 2024 03:11 AM
அ நிறம் | அளவு
விழுப்புரம்: கோவிலுக்குச் சென்ற ஷேர் ஆட்டோ டிரைவர் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் அடுத்த வாணியம்பாளையத்தைச் சேர்ந்தவர் குமார், 53; ஷேர் ஆட்டோ டிரைவர். இவர், கடந்த 13ம் தேதி வீட்டிலிருந்து, கோலியனுார் சிவன் கோவிலுக்கு சென்று வருவதாக கூறி, பஸ்சில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
