நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : வளவனுார் அருகே ஆடுகளை திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வளவனுார் அடுத்த புதுப்பாளையம் கொங்கமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 69; விவசாயி. வீட்டில் வெள்ளாடு களை வளர்த்து வருகிறார். கடந்த 26ம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு எழுந்து பார்த்தபோது, வீட்டின் தோட்டத்தில் கட்டியிருந்த 5 ஆடுகள் திருடு போனது தெரியவந்தது.
புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.