ADDED : அக் 06, 2025 02:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: சீரடி சாய்பாபா 107ம் ஆண்டு மகா சமாதி தின பூஜை நடந்தது.
திண்டிவனம் போலீஸ் நிலையம் அருகில் உள்ள கற்பக விநாயகர் கோவில் வளாகத்தில் சீரடி சாய்பாபாவின் 107ம் ஆண்டு சமாதி தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை யாகசாலை பூஜை மற்றும் ஆராதனை நடந்தது.
தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 3:00 மணிக்கு சீரடி சாய்பாபா பட ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியே நடந்தது. ஏற்பாடுகளை, சீரடி சாய் சக்தி கணேசா மண்டலி டிரஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர்.