/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சிவசக்தி அனுகுல விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
/
சிவசக்தி அனுகுல விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED : நவ 28, 2024 07:27 AM

விழுப்புரம்: விழுப்புரம் வரதப்பன் நாயக்கன் தோப்பு, சிவன்படை தெருவில் உள்ள சிவசக்தி அனுகுல விநாயகர் கோவிலில், திருப்பணிகள் நடந்து முடிந்து, கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.
கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் காலை 9.00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து, லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேச பலியும் நடந்தது. மாலை 5.00 மணிக்கு மிருத்சங்கிரகணம், அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனமும், முதல் கால பூஜை நடந்தது.
நேற்று கும்பாபிஷேக விழாவையொட்டி காலை 7.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜையும், இரண்டாம் கால யாக பூஜையும் தொடங்கி, யாகங்களும் நடந்தது.
காலை 9.45 மணிக்கு, கடம் புறப்பாடாகி புனித நீர் கொண்டுவரப்பட்டு, காலை 10.00 மணிக்கு கோவில் விமான கோபுர கலசத்திற்கும் மற்றும் மூலவர், பரிவார மூர்த்திகள் சன்னதிகளிலும் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, தீபாராதனை வழிபாடுகள் நடந்தது.
விழுப்புரம் சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த பொது மக்கள் திரளாக கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.