/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறை
/
அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறை
ADDED : செப் 30, 2024 06:17 AM
விக்கிரவாண்டி: விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் காலியாக உள்ள உடற்கூறாய்வு டாக்டர் பணியிடங்களை நிரப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வருமா நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர்.
மேலும், விபத்தில் சிக்கி காயம் அடைந்து உயிருக்கு போராடுபவர்களையும் சிகிச்சைக்காக இம்மருத்துவமனைக்கு கொண்டு வருகின்றனர்.
கடந்த காலங்களில் சாலை விபத்துகளில் இறந்த வர்களும் மற்ற மாவட்டங்களில் இறந்தவர்களின் உடல்களைக் கூட அங்கு ஏற்படும் சட்டம், ஒழுங்கு பிரச்னைக்காக இந்த மருத்துவமனைக்கு சடலங்களை அனுப்பி வைத்து பிரேத பரிசோதனை செய்வது வழக்கம். கடந்த ஒரு ஆண்டாக உடற்கூறாய்வு பிரிவில் 6 டாக்டர்களில் 3 டாக்டர்கள் பணியிடம் காலியாக உள்ளது.
மாவட்டத்தில் தினமும் குறைந்தபட்சமாக 6 முதல் 8 சடலங்கள் பிரேத பரிசோதனை செய்ய வேண்டிய நிலை உள்ளது.
பணியில் இருக்கும் 3 பேரில் ஒருவர் தினமும் கோர்ட்டுக்கு செல்ல வேண் டிய நிலையும், சில நேரங்களில் புதைக்கப்பட்ட இடத்தில் சடலத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய செல்லும் நிலை உள்ளது.
இதுபோன்ற நேரங்களில் பல்வேறு இடங்களில் இருந்த 5க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து அந்த உடல்களை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்கு எடுத்து வரும் போது தேவையான டாக்டர்கள் இல்லாமல் அவதிக் குள்ளாகின்றனர். அதனால் மருத்துவக் கல்லுாரி நிர்வாகம், எந்த மாவட்டத்தில் விபத்து நடந்ததோ அந்த மாவட்டத்தில் பிரேத பரிசோதனை செய்து கொள்ளுமாறு சடலங்களை திருப்பி அனுப்பும் நிலை உள்ளது.
கடந்த வாரத்தில் மடப்பட்டு அருகே மேட்டத்துாரில் நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் இறந்த நிலையில் அவர்களுடைய சடலங்களை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல நிர்வாகம் கூறியது. இது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
எனவே சுகாதாரத் துறை மற்றுமு மாவட்ட அமைச்சர், மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து பற்றாக்குறையாக உள்ள டாக்டர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

