/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஸ்ரீ தரம்சந்த் ஜெயின் சி.பி.எஸ்.இ., பள்ளி 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் சாதனை

ADDED : மே 17, 2025 11:34 PM

திண்டிவனம்: ஸ்ரீ தரம்சந்த் ஜெயின் பள்ளி சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்துள்ளனர்.
திண்டிவனம் அருகே உள்ள கருவம்பாக்கம் ஸ்ரீ தரம்சந்த் ஜெயின் சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்கள், 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில், முதன்மை பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் சாதனை படைத்துள்ளனர்.
பிளஸ் 2 தேர்வில் மாணவி ரிங்கு தேவி 93.2 சதவீதம், ஹர்ஷிதா 93 சதவீதமும், ஹித்திஷ் 89.8 சதவீதம் பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்தனர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கார்குழலி 95.6 சதவீதமும், கேஷவ் சரண் 94.4 சதவீதமும், வர்ணிகா சாய் 94.2 சதவீதம் பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.
10 மற்றும் பிளஸ் 2 தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு, பள்ளி சார்பில் சால்வை அணிவித்து பரிசு தொகை வழங்கப்பட்டது. தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவர்கள், உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கும் பள்ளி தாளாளர் பப்ளாசா, செயலாளர் ஜின்ராஜ், பொருளாளர் நவீன்குமார், நிர்வாக இயக்குநர் அனுராக், பள்ளி முதல்வர் சாந்தி பாலச்சந்தர் ஆகியோர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.