/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கோட்டக்குப்பம் ரவுண்டானாவில் சிக்னல் பழுது: விபத்து அபாயம்
/
கோட்டக்குப்பம் ரவுண்டானாவில் சிக்னல் பழுது: விபத்து அபாயம்
கோட்டக்குப்பம் ரவுண்டானாவில் சிக்னல் பழுது: விபத்து அபாயம்
கோட்டக்குப்பம் ரவுண்டானாவில் சிக்னல் பழுது: விபத்து அபாயம்
ADDED : நவ 08, 2024 11:09 PM

கோட்டக்குப்பம்: கோட்டக்குப்பம் ரவுண்டானா பகுதியில் அமைக்கப்பட்ட சிக்னல் விளக்குகள் பழுதடைந்ததால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
கோட்டக்குப்பம் நகராட்சி முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக உள்ளது. இங்குள்ள ரவுண்டானாவைக் கடந்து, சென்னை மார்க்கமாக இ.சி.ஆரில் இருந்து வருவோர், புதுச்சேரி, கடலுார், சிதம்பரம் பகுதிகளுக்கும், கோட்டக்குப்பம் நகரத்திற்கும் செல்கின்றனர்.
இதே போன்று புதுச்சேரி, கோட்டக்குப்பம் மார்க்கத்தில் இருந்து சென்னை மார்க்கமாக செல்லும் வாகனங்களும், இந்த ரவுண்டானாவை கடந்து தான் செல்ல வேண்டும்.
மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த பகுதியில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடக்கின்றன. அதனையொட்டி, ரவுண்டானா பகுதியில் இருபக்கமும் சிக்னல் விளக்குகள் அமைக்கப்பட்டது.
சில மாதங்களாக இந்த சிக்னல் பழுதாகி விட்டது. இதனால் வாகனங்கள் தாறுமாறாக செல்கின்றன. இதனால், இப்பகுதியில் விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, அதிகாரிகள் ரவுண்டானாவில் பழுதடைந்துள்ள சிக்னல் விளக்குகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.