/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சிகா பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வில் சாதனை
/
சிகா பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வில் சாதனை
ADDED : மே 10, 2025 12:35 AM

விழுப்புரம்: பிளஸ் 2 பொதுத்தேர்வில் கப்பியாம்புலியூர் சிகா மேல்நிலை பள்ளி நுாறு சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
விழுப்புரம் அருகே கப்பியாம்புலியூர் சிகா மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் வெற்றி பெற்று நுாறு சதவீத தேர்ச்சியை உறுதி செய்தனர்.
தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை, முன்னாள் அமைச்சர் பொன்முடி, முன்னாள் எம்.பி., கவுதமசிகாமணி சால்வை அணிவித்து பாராட்டினர்.
பள்ளி மாணவி ஷாகினாபேகம் 600க்கு 595 பெற்று சிறப்பிடம் பிடித்தார். மாணவிகள் ஜனனி 593 மதிப்பெண்ணும், மோகனப்பிரியா 592 பெற்றனர். 590 மதிப்பெண்களுக்கு மேல் 7 மாணவர்கள் பெற்றுள்ளனர். 30 மாணவர்கள் 580 மதிப்பெண்ணுக்க மேல் பெற்றுள்ளனர்.
பாட வாரியாக கணினி அறிவியலில், 36 மாணவர்களும், வேதியியலில் 30, கணிதம் 23, உயிரியல் 16, கணினி பயன்பாடுகள் 11, பொருளியல் 5, வணிகவியல் ஒரு மாணவர் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.
அதிக மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளை சிகா கல்வி அறக்கட்டளை தலைவர் சாமிநாதன், பள்ளி முதல்வர் கோபால் உட்பட ஆசிரியர்கள், பெற்றோர்கள், பள்ளி ஊழியர்கள் பாராட்டினர்.