/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சிங்கப்பூர் நகர் சாலை மோசம்: வாகன ஓட்டிகள் கடும் அவதி
/
சிங்கப்பூர் நகர் சாலை மோசம்: வாகன ஓட்டிகள் கடும் அவதி
சிங்கப்பூர் நகர் சாலை மோசம்: வாகன ஓட்டிகள் கடும் அவதி
சிங்கப்பூர் நகர் சாலை மோசம்: வாகன ஓட்டிகள் கடும் அவதி
ADDED : பிப் 23, 2026 04:15 AM

விழுப்புரம்: விழுப்புரம் சிங்கப்பூர் நகர் சாலை போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் படுமோசமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
விழுப்புரம் - திருச்சி நெடுஞ்சாலையில் இருந்து சிங்கப்பூர் நகருக்குச் செல்லும் சாலை உள்ளது. இச்சாலை வழியாக நுாற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் மற்றும் அரசு தோட்டக்கலைத்துறை அலுவலகம் ஆகியவற்றிற்கு தினந்தோறும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர்.
இந்த சாலை தற்போது சேதமடைந்து ஜல்லிகள் பெயர்ந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
எனவே, சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.