/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
எஸ்.ஐ.ஆர்., பணி தி.மு.க.வினர் ஆய்வு
/
எஸ்.ஐ.ஆர்., பணி தி.மு.க.வினர் ஆய்வு
ADDED : நவ 25, 2025 04:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: வீரமூர், கக்கனுார் ஊராட்சிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியை தி.மு.க.,வினர் ஆய்வு செய்தனர்.
காணை ஒன்றியம் வீரமூர் மற்றும் கக்கனுார் ஊராட்சிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடந்து வருகிறது. இப்பணியை, காணை தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் கல்பட்டு ராஜா மற்றும் ஒன்றிய சேர்மன் கலைச்செல்வி நேரில் ஆய்வு செய்தனர். அப்போது, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் அரங்கநாதன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி கதிரவன், கிளை செயலாளர் வெங்கடேசன் மற்றும் ஓட்டுச்சாவடி அலுவலர்கள், பாக முகவர்கள் உடனிருந்தனர்.

