/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கோலியனுார் ஒன்றியத்தில் எஸ்.ஐ.ஆர்., பணி தீவிரம்
/
கோலியனுார் ஒன்றியத்தில் எஸ்.ஐ.ஆர்., பணி தீவிரம்
ADDED : நவ 28, 2025 05:20 AM

விழுப்புரம்: கோலியனுார் ஒன்றியத்தில், வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தப் பணிகளை, பி.டி.ஓ., நேரில் ஆய்வு செய்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களை திரும்பப் பெறும் பணியை தீவிரப்படுத்துமாறு, கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, கோலியனுார் ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில், வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தப் பணிகளை, பி.டி.ஓ., கண்ணன் நேரில் செய்தார். கோலியனுார், திருவாமாத்துார், பொய்யப்பாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளில், பணிகளை பார்வையிட்டார்.
ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் அருண்ராஜ், ஊராட்சி செயலாளர் பழனியம்மாள், ஊராட்சி உதவியாளர் பரமேஸ்வரி, துாய்மை பணியாளர்கள் நாவம்மாள், செல்வி, இல்லம் தேடி கல்வித் திட்டப் பணியாளர்கள் முத்துலட்சுமி, வேதவல்லி உடனிருந்தனர்.

