ADDED : நவ 28, 2025 05:20 AM

மயிலம்: மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே மா.கம்யூ., சார்பில் காத்தி ருப்பு போராட்டம் நடந்தது.
மயிலம் ஒன்றியம், சின்ன நெற்குணம் ஊராட்சியில் நடந்து வரும் அரசின் திட்ட பணிகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக மா.கம்யூ., கட்சியைச் சேர்ந்த ஒன்றிய குழு உறுப்பினர் காளிதாஸ் தலைமையில் 30 பேர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்ட களத்தில் இருந்து கலைந்து செல்ல மாட்டோம் எனக் கூறி அலுவலக வளாகத்தில் சமையல் செய்து, அங்கேயே அமர்ந்து சாப்பிட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மயிலம் இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறியும் அங்கிருந்து க லைந்து செல்லாமல் தொடர்ந்து காத்திருக்கு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதனால் கூட்டேரிப்பட்டு பகுதியில் பரபரப்பு ஏற்பட் டுள்ளது.

