ADDED : நவ 28, 2025 05:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: பெரியதச்சூர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக நாகராஜன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
பெரியதச்சூர் காவல் நிலையம் தரம் உயர்த்தி தனியாக இன்ஸ்பெக்டர் நியமனம் செய்யப்பட்டு செயல்படுவார் என அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த நாகராஜன் பதவி உயர்வு பெற்று விழுப்புரம் மாவட்டத்தில் பெரியதச்சூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக நியமனம் செய்யப்பட்டார். அவர் நேற்று காலை பெரியதச்சூர் காவல் நிலையத்தில் பொறுப்பேற்றார்.

