/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஏ.டி.எம்., மையத்தில் ஒளித்த சைரன் சத்தத்தால் பரபரப்பு
/
ஏ.டி.எம்., மையத்தில் ஒளித்த சைரன் சத்தத்தால் பரபரப்பு
ஏ.டி.எம்., மையத்தில் ஒளித்த சைரன் சத்தத்தால் பரபரப்பு
ஏ.டி.எம்., மையத்தில் ஒளித்த சைரன் சத்தத்தால் பரபரப்பு
ADDED : செப் 09, 2025 05:58 AM
விழுப்புரம் : விழுப்புரத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம்., மையத்தில் திடீரென சைரன் ஒலி ஒளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு, மகாராஜபுரம் பகுதியில் இந்தியன் ஓவர்சிஸ் வங்கி ஏ.டி.எம்., இயந்திரம் அறையில் இருந்து நேற்று காலை 7.00 மணிக்கு திடீரென அபாய எச்சரிக்கை ஒலி ஒளித்தது. சுமார் 15 நிமிடம் சைரன் ஒலி ஒளித்ததையொட்டி, அவ்வழியே சென்ற பொதுமக்கள் வங்கி அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். சைரன் ஒலி சத்தம் தானாக நின்றது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக அபாய சைரன் ஒளித்திருக்கலாம் என, வங்கி ஊழியர்கள் தரப்பில் தெரிவித்தனர். இந்த ஏ.டி.எம்., அருகே உள்ள மற்றொரு வங்கி ஏ.டி.எம்., இல் கடந்த சில மாதங்களுக்கு முன் பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.