ADDED : செப் 09, 2025 06:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே மின்னல் தாக்கியதில் 4 ஆடுகள் இறந்தன.
விக்கிரவாண்டி அடுத்த முட்டத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி, 57; ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு தனது ஆடுகளை கொட்டகையில் அடைத்து விட்டு துாங்கினார்.
விக்கிரவாண்டி சுற்றுவட்டார பகுதியில் நேற்று காலை இடியுடன் மழை பெய்தது. அப்போது, ஆட்டு கொட்டகையின் மீது மின்னல் தாக்கியதில் அங்கிருந்த 4 ஆடுகள் இறந்தன.
தகவல் அறிந்த வி.ஏ.ஓ., கார்த்திக் யாதவ், நேமூர் கால்நடை மருத்துவர் கருப்பண்ணன் ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரித்து, ஆடுகளை பிரேத பரிசோதனை செய்து அறிக்கையை மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைத்தனர்.