/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆபத்தை அறியாமல் பைபாஸ் சாலையில் 'ஸ்கேட்டிங்' பயிற்சி
/
ஆபத்தை அறியாமல் பைபாஸ் சாலையில் 'ஸ்கேட்டிங்' பயிற்சி
ஆபத்தை அறியாமல் பைபாஸ் சாலையில் 'ஸ்கேட்டிங்' பயிற்சி
ஆபத்தை அறியாமல் பைபாஸ் சாலையில் 'ஸ்கேட்டிங்' பயிற்சி
ADDED : ஜூலை 02, 2025 11:58 PM
புதுச்சேரி- திண்டிவனம் சாலையில், பெற்றோரின் அலட்சியத்தால் ஆபத்தை அறியாமல் சிறுவர், சிறுமியர், 'ஸ்கேட்டிங்' பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது 'ஸ்கேட்டிங்' விளையாட்டு மீதான ஆர்வம் மாணவர்களிடையே அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக, பல தனியார் பள்ளிகள் மற்றும் பல்வேறு சங்கங்கள் பயிற்சி அளித்து வருகின்றன.
இதில் பெரும்பாலான பெற்றோர், தங்களது பிள்ளைகளுக்கு 'ஸ்கேட்டிங்' பயிற்சி அளிக்க விரும்புகின்றனர். இதற்கு தகுந்தபடி உரிய செயற்கைத் தளங்கள் தேர்வு செய்யப்படுகின்றன.
இதற்கு தகுந்த வசதிகள் இல்லையென்றால் சிமென்ட் தளங்கள், கூடைப்பந்து மைதானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. சில 'ஸ்கேட்டிங்' பயிற்சி மையங்கள் மட்டும் தங்களுக்கென பயிற்சித் தளங்களை வைத்திருக்கின்றனர்.
பல மையங்களில் பயிற்சி தளங்கள் இல்லாததால், வாகனங்கள் செல்லும் சாலைகளை பயன்படுத்தும் சூழல் உள்ளது. இதே போன்று, புதுச்சேரி - திண்டிவனம் பைபாஸ் சாலையில், மொரட்டாண்டி பிரத்தியங்கிரா காளி கோவில், சந்திப்பில் உள்ள சர்வீஸ் சாலை மற்றும் புள்ளிச்சப்பள்ளம் பகுதியில் 'ஸ்கேட்டிங்' பயிற்சி அளிக்கப்படுகிறது.
இங்கு பயிற்சி எடுக்கும் சிறுவர், சிறுமியர் பெற்றோர் இரு சக்கர வாகனத்தில் தொடர அவர்களின் துணையுடன், பைபாஸ் சாலையில் நீண்ட துாரத்திற்கு பயிற்சி மேற்கொள்கின்றனர்.
ஆபத்தை உணராமல் நான்கு வழிச் சாலையில் சிலர் 'ஸ்கேட்டிங்' பயிற்சியில் ஈடுபடுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
மொரட்டாண்டி டோல்கேட்டில் துவங்கி, புள்ளிச்சப்பள்ளம் வரை 6 கி.மீ., துாரத்திற்கு காலை நேரங்களில் பயிற்சி மேற்கொள்கின்றனர்.
இந்த சாலையில் 'ஸ்கேட்டிங்' பயிற்சியில் ஈடுபடுவது விபரீதத்தை விலை கொடுத்து வாங்குவதாக உள்ளது. இதற்கு மாவட்ட போலீசார் கண்காணித்து அறிவுரை வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- நமது நிருபர்-