/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சர்க்கரை ஆலையில் திறன் மேம்பாட்டு பயிற்சி
/
சர்க்கரை ஆலையில் திறன் மேம்பாட்டு பயிற்சி
ADDED : பிப் 23, 2024 03:39 AM

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பெரியசெவலை செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு விவசாயிகளுக்கு இடுபொருட்கள் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்து.
ஆலை நிர்வாக இயக்குனர் முத்து மீனாட்சி தலைமை தாங்கினார். தலைமை கரும்பு அலுவலர் மணிமாறன், கரும்பு ஆராய்ச்சி நிலைய தலைவர் சசிகுமார் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், சர்க்கரை கட்டுமானம் 9.5 சதவீதத்திற்கு கூடுதலாக வருகிறது. மேலும் ஆலைக்கு வருகின்ற கரும்பில் கொழுந்தாடை நீக்கி சுத்தமான கரும்பை அறுவடை செய்து அனுப்பி வைக்க வேண்டும்.
கரும்பு மகசூலை அதிகரிக்க அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம், தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் ஆகியவற்றின் கீழ் பருசீவல் நாற்று, ஒரு பருகரணை, திசு வளர்ப்பு நாற்று ஆகியவற்றிற்கு வழங்கப்படும். மேலும் அதன் மானிய விவரத்தினை விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துக் கூறப்பட்டது.
இதுமட்டுமின்றி, கரும்பில் உளுந்து ஊடுபயிர் செய்வதால் கரும்பு மகசூல் அதிகரிப்பதோடு ஊடுபயிர் மூலமும் கூடுதல் வருவாய் கிடைக்கும். மண் பரிசோதனையின் அவசியம் பற்றியும், இயந்திர சாகுபடி குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கப்பட்டது.
பயிற்சியில், கரும்பு அலுவலர்கள் கோபி சிகாமணி, பொன்ரங்கம், வெங்கடாசலம், தியாகராஜன் மற்றும் கரும்பு உதவியாளர்கள், விவசாயிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.