தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/காளான் வளர்ப்பு குறித்த திறன் வளர்ப்பு பயிற்சி

காளான் வளர்ப்பு குறித்த திறன் வளர்ப்பு பயிற்சி

காளான் வளர்ப்பு குறித்த திறன் வளர்ப்பு பயிற்சி


UPDATED : நவ 15, 2026 04:02 PM

ADDED : நவ 15, 2026 04:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 15, 2026 04:02 PM ADDED : நவ 15, 2026 04:02 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வானுார்: வானுார் அடுத்த திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலக கூட்ட அரங்கில் பண்ணை மகளிர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி நடந்தது.

வானூர் வேளாண்மை உதவி இயக்குனர் எத்திராஜ் வரவேற்று, ஆத்மா திட்டத்தின் கீழ் நடத்தப்படும் திறன் வளர்ப்பு பயிற்சியின் கீழ் பண்ணை மகளிருக்கு காளான் வளர்ப்பின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைத்தார். இந்த பயிற்சியில் காரைக்கால் ஜவஹர்லால் நேரு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய ஓய்வு பெற்ற பயிர் நோய்யியல் துறை பேராசிரியர் ரத்தின சபாபதி கலந்து கொண்டு, காளான் வளர்ப்பில் நவீன தொழில்நுட்பங்கள், கூடுதல் வருவாய் ஈட்டுதல், விற்பனை வாய்ப்புகள் குறித்து பேசினார்.

வட்டார தொழில்நுட்ப மேலாளர் உஷா நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் மஞ்சு, உதவி தொழில் நுட்ப மேலாளர் சந்திரசேகர் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us