/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் கே.கே.ரோட்டில் பாதாள சாக்கடை பணி மந்தம்: மக்கள் அவதி
/
விழுப்புரம் கே.கே.ரோட்டில் பாதாள சாக்கடை பணி மந்தம்: மக்கள் அவதி
விழுப்புரம் கே.கே.ரோட்டில் பாதாள சாக்கடை பணி மந்தம்: மக்கள் அவதி
விழுப்புரம் கே.கே.ரோட்டில் பாதாள சாக்கடை பணி மந்தம்: மக்கள் அவதி
ADDED : டிச 15, 2024 10:58 PM

விழுப்புரம்; விழுப்புரம் கே.கே.ரோடில் முக்தி அருகே பாதாள சாக்கடை பணி மந்தமாக நடந்து வருவாதல் வாகனங்கள் செல்ல வழியின்றி அவதிப்பட்டு வருகின்றனர்.
விழுப்புரம் கே.கே.ரோடு முக்தி அருகே கணபதி நகர் சாலை சந்திப்பில், பாதாள சாக்கடை திட்டத்திற்காக, அங்குள்ள கல்வெர்ட் அருகே பாதாள சாக்கடை குழாய்கள் சந்திக்கும் கட்டமைப்பு கட்டப்பட்டு வருகிறது.
கடந்த ஒரு மாத காலமாக பணிகள் மந்தகதியில் நடந்து வருகிறது. இதனால், இரு புறமும் சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. குறிப்பாக, விழுப்புரம் புதிய பஸ் நிலையத்திலிருந்து கே.கே.ரோடிற்கு வரும் சுதாகர் நகர், கணபதி நகர் மெயின் சாலை மூடப்பட்டுள்ளதால், ஏராளமான வாகன ஓட்டிகள் வந்து மீண்டும் திரும்பிச் செல்கின்றனர்.
அங்கு வேலை நடப்பதற்கான அறிவிப்பு தடுப்புகளும் இல்லாமல், அந்த ஒரு வழிச்சாலையில் ஏராளமான வாகன ஓட்டிகள் வந்து, மழைநீர் தேங்கிய குறுகிய சாலையில், பல இடங்களில் உள்ள பாதாள சாக்கடைக்கு எடுக்கப்பட்ட பள்ளத்தில் கார், இலகு ரக வாகனங்கள் சிக்கி அவதிப்பட்டு செல்கின்றனர்.
இதனால், அந்த சாலையில் உள்ள பள்ளங்களை சீர்படுத்த வேண்டும். இதேபோல், அங்கு திருப்பாச்சனுார் செல்லும் சாலையும் பாதியளவு மூடப்பட்டுள்ளதால், பஸ், லாரி போக்குவரத்தும் பாதித்துள்ளது.
பாதாள சாக்கடை பணியை விரைந்து முடிக்கவும், அதுவரை அந்த பகுதியில் ஓரமாக கணபதி நகர், சுதாகர் நகர் பகுதிக்கு வாகனங்கள் செல்வதற்கு வழி ஏற்படுத்தி தர வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

