/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பேட்டரி கடையிலிருந்த வந்த புகையால் பரபரப்பு
/
பேட்டரி கடையிலிருந்த வந்த புகையால் பரபரப்பு
ADDED : டிச 05, 2024 07:03 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் பேட்டரி கடையில் திடீரென புகை கிளம்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தருமபுரியை சேர்ந்தவர் ஜெபஸ்டின்,45; இவர், விழுப்புரம் செஞ்சி சாலையில் வாகனங்களுக்கான பேட்டரியை விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். பூட்டியிருந்த இந்த கடையில் இருந்து நேற்று காலை 7.00 மணிக்கு திடீரென புகை வெளியேவந்துள்ளது.
இதை கண்ட பொதுமக்கள் சிலர், விழுப்புரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பேட்டரி புகையை தண்ணீர் அடித்து தீப்பிடித்து அசம்பாவிதம் ஏற்படாமல் அணைத்தனர்.
இதில் ரூ.15 ஆயிரம் மதிப்பிலான பேட்டரி சேதமாகியது. பேட்டரியில் தண்ணீர் பட்டு ஷாட் சர்க்கியூட் ஏற்பட்டு புகை வெளியாகியதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.