/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மதுபாட்டில்கள் கடத்தல்: மூதாட்டி உட்பட 2 பேர் கைது
/
மதுபாட்டில்கள் கடத்தல்: மூதாட்டி உட்பட 2 பேர் கைது
மதுபாட்டில்கள் கடத்தல்: மூதாட்டி உட்பட 2 பேர் கைது
மதுபாட்டில்கள் கடத்தல்: மூதாட்டி உட்பட 2 பேர் கைது
ADDED : நவ 03, 2024 11:01 PM
மயிலம்: மயிலம் அடுத்த தழுதாளி பஸ் நிறுத்தம் அருகே புதுச்சேரியில் இருந்து மது பாட்டில்களை கடத்திய மூதாட்டியை போலீசார் கைது செய்தனர்.
தழுதாளி கிராமத்தில் புதுச்சேரி - மயிலம் நெடுஞ்சாலையில் மயிலம் இன்ஸ்பெக்டர் கமலஹாசன் தலைமையிலான போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த மூதாட்டி வைத்திருந்த கைப்பையை பரிசோதனை செய்ததில் 180 மில்லி அளவு கொண்ட 60 மது பாட்டில்களை புதுச்சேரியில் இருந்து கடத்தி வந்தது தெரிந்தது.
பின், விசாரணையில் மலையரசன்குப்பத்தைச் சேர்ந்த சுப்ரமணி மனைவி அங்கம்மாள், 75; என தெரியவந்தது. உடன் மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
இதேபோன்று, மயிலம் பஸ் நிலையம் அருகே புதுச்சேரி மதுபாட்டில்கள் வைத்திருந்த மயிலம், அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த ஜெயசங்கர், 56; என்பவரை கைது செய்து 14 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.