/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தொழிலாளி வீட்டில் புகுந்த பாம்பு
/
தொழிலாளி வீட்டில் புகுந்த பாம்பு
ADDED : மே 16, 2025 02:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அருகே தொழிலாளி வீட்டில் புகுந்த நல்லபாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர்.
விழுப்புரம் அருகே அயினம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் துரை. கூலி தொழிலாளி. இவர் வீட்டில் நேற்று காலை 11.00 மணிக்கு மேல் 3 அடி நீளமுள்ள நல்லபாம்பு ஒன்று வீட்டிற்குள் புகுந்துள்ளது. இதை கண்ட துரை, பாம்பை துரத்திய போது, வீட்டிற்குள் புகுந்து கொண்டது. பின், அவர் விழுப்புரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
இதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள், வீட்டிற்குள் புகுந்த நல்லபாம்பை லாவகமாக பிடித்து, அருகேவுள்ள காப்பு காட்டில் விட்டனர்.