/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு பள்ளியில் சமூக மேம்பாட்டு விழிப்புணர்வு
/
அரசு பள்ளியில் சமூக மேம்பாட்டு விழிப்புணர்வு
ADDED : டிச 23, 2024 06:42 AM

விழுப்புரம்: காணை அருகே கருவாட்சி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி வளாகத்தில், டாக் சமூக மேம்பாட்டு திட்டத்திற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இன்ஸ்பெக்டர் அனு தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை விஜயா உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள், கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதில், மாணவர்களுக்கு, தமிழக அரசின் கல்வி உதவிதொகை பெற சேமிப்பு கணக்கு துவங்கிய அதற்கான பாஸ் புத்தகத்தை இன்ஸ்பெக்டர் அனு வழங்கினார்.
தொடர்ந்து, அனந்தபுரம் துணை அஞ்சலக அலுவலர் சத்தியநாராயணன், கருவாட்சி கிளை அஞ்சலக அலுவலர் கலைசெல்வி ஆகியோர், மாணவர்கள், ஆசிரியர்களுக்கு சிறு சேமிப்பு சம்பந்தமான விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு, தபால் நிலையத்தில் உள்ள சிறுசேமிப்பு திட்டங்கள் பற்றி கூறினர்.
ஆசிரியர் அன்புசெல்வம் நன்றி கூறினார்.