/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மண் மாதிரி சேகரிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
மண் மாதிரி சேகரிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : டிச 25, 2024 03:37 AM

வானூர் : வானுார் பகுதியில், காரைக்கால் பஜன்கோ வேளாண்மை கல்லுாரி மாணவிகள் சார்பில், விவசாயிகளுக்கு மண் மாதிரி சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
காரைக்கால் பஜன்கோ வேளாண் கல்லூரி நான்காம் ஆண்டு மாணவிகள், வானுார் பகுதியில் விவசாயம் குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக இந்த கல்லுாரி மாணவிகள் சார்பில், ஊரக வேளாண்மை பணி அனுபவ பயிற்சி திட்டத்தின் கீழ் பூஜ்ஜிய ஆற்றல் குளிர் அறை, கிசான் கிரெடிட் கார்டு, மண் மாதிரி சேகரிப்பு, பூச்சி கொல்லி மற்றும் உரங்கள் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் செயல்விளக்க நிகழ்ச்சி நடந்தது.
கல்லுாரி முதல்வர் புஷ்பராஜ், முனைவர்கள் பார்த்தசாரதி, சங்கர் ஆகியோர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.