/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மின்சாரம் மற்றும் குடிநீர் பிரச்னைகளுக்கு தீர்வு சித்தாத்துார் ஊராட்சித் தலைவர் பெருமிதம்

ADDED : பிப் 23, 2024 03:41 AM

சித்தாத்துார் ஊராட்சிக்கு தனி டிரான்ஸ்பார்மர் அமைத்ததால் மில் தறி நெசவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து சித்தாத்துார் ஊராட்சி தலைவர் சிவஞானசுந்தரி சிங்காரவேல் கூறியதாவது:
ஊராட்சியில் ஏராளமான கைத்தறி மற்றும் மில் தறி நெசவாளர்கள் வசித்து வருகின்றனர். மில் தறி நெசவாளர்கள் தடையற்ற மின்சாரம் வேண்டி பல முறை அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
அதன்படி எனது முயற்சியினால் தமிழக அரசு மின்வாரியம் மூலம் ஊராட்சிக்கு தனி டிரான்ஸ்பார்மர் அமைத்துக் கொடுத்துள்ளேன். இதனால், லோ வோல்ட்டேஜ் மின்சாரம் இன்றி மில் தறிகள் இயங்கும். மேலும் 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் தொட்டிக்கு போர் வசதி செய்து, மெயின் பைப் லைன் போடப்பட்டுள்ளதால் கிராம மக்களுக்கு தினமும் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்ப்பட்டு வருகிறது.
பெத்தான்கொள்ளைத் தெரு, அண்ணா தெருக்களில் 8.9 லட்சம் ரூபாய் மதிப்பில் பவர் பிளாக் கற்கள் அமைத்தது.
மேலும் 1.88 லட்சம் ரூபாய் மதிப்பில் நடு தெருவிற்கு வடிகாய் வாய்க்கால் அமைத்தது எனது நிர்வாகத்தின் சாதனைகளாகும்.
ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வழி முழுதும் 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பவர் பிளாக் கற்கள் அமைத்துள்ளேன்.
மேலும், சித்தாத்துார் ஊராட்சி மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளையும், மத்திய, மாநில அரசுகளின் அனைத்து திட்டங்களும் கிடைக்குமாறு என்னுடைய பணி தொடர்ந்து இருக்கும்.
இவ்வாறு ஊராட்சி தலைவர் சிவஞானசுந்தரி சிங்காரவேல் கூறினார்.