/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாமனாருக்கு கத்தி வெட்டு மருமகன் கைது
/
மாமனாருக்கு கத்தி வெட்டு மருமகன் கைது
ADDED : ஜூன் 28, 2025 01:06 AM
செஞ்சி :  மாமனாரை கத்தியால் வெட்டிய மருமகனை போலீசார் கைது செய்தனர்.
செஞ்சி அடுத்த புலிப்பாட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் சேகர், 55; இவரது மகள் பானுமதி, 28; அதே ஊரைச் சேர்ந்த ராஜகோபால் மகன் இளையராஜா, 37; என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இளையராஜா குடித்துவிட்டு வந்து பானுமதியை தாக்கியதால், சில நாட்களுக்கு முன்பு பானுமதி தாய் வீட்டிற்கு வந்து விட்டார். இதனால் இளையராஜாவுக்கு சேகர் கொடுத்திருந்த விவசாய நிலத்திற்கு தண்ணி பாய்ச்சும் பி.வி.சி., பைப்புகளை திரும்ப எடுத்து வந்துவிட்டார். இதனால் ஆத்திரடைந்த இளையராஜா நேற்று காலை 2 மணிக்கு வீட்டுக்கு வெளியே துாங்கிக் கொண்டிருந்த சேகரை கத்தியால் வெட்டினார்.
இதில் படுகாயமடைந்த சேகர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து அனந்தபுரம் போலீசார் வழக்கு பதிந்து இளையராஜாவை கைது செய்தனர்.

