/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஒலி, ஒளி அமைப்பு தொழிலாளர் நலச்சங்க கிளை துவக்க விழா
/
ஒலி, ஒளி அமைப்பு தொழிலாளர் நலச்சங்க கிளை துவக்க விழா
ஒலி, ஒளி அமைப்பு தொழிலாளர் நலச்சங்க கிளை துவக்க விழா
ஒலி, ஒளி அமைப்பு தொழிலாளர் நலச்சங்க கிளை துவக்க விழா
ADDED : ஜன 08, 2024 05:12 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் தமிழ்நாடு ஒலி, ஒளி அமைப்பு தொழிலாளர் நலச்சங்க விழுப்புரம் கிளை துவக்க விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு, சங்க மாவட்ட தலைவர் மணி தலைமை தாங்கினார். பொருளாளர் ராஜசேகர், கவுரவ தலைவர் மோகன், செயலாளர் செல்வம் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்கள் மாநில காப்பாளர் ரங்கநாதன், தலைவர் ஆனந்தன், பொதுச் செயலாளர் ரங்கநாதன், பொருளாளர் பக்தவச்சலம், துணைத் தலைவர் கெஜபதி, துணைச் செயலாளர் ஜெயமணி உட்பட பலர் பங்கேற்றனர்.
தொடர்ந்து நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஒலி, ஒளி நலச்சங்கத்தினருக்கு, தமிழக அரசு தனி நலவாரியம் அமைக்க வேண்டும். சங்கத்தின் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு, ஆண்டுக்கொருமுறை இலவச மருத்துவ முகாம் நடத்த வேண்டும். அரசு நலத்திட்ட உதவிகள், தொழில் கடன்கள் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.