/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தெற்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம்
/
தெற்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம்
ADDED : மே 23, 2025 12:37 AM

விழுப்புரம் : விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் தெற்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம் நடந்தது.
மாவட்ட பொறுப்பாளர் கவுதமசிகாமணி தலைமை தாங்கினார்.அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., மாவட்ட அவைத் தலைவர் ஜெயச்சந்திரன், தொகுதி பொறுப்பாளர்கள் ஜெயராஜ், கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர்.
வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம், உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் பொன்முடி எம்.எல்.ஏ., சிறப்புரையாற்றினர். கூட்டத்தில், தி.மு.க., வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
மாவட்ட துணை செயலாளர்கள் முருகன், கற்பகம், தலைமை கழக வழக்கறிஞர் சுரேஷ், மாநில மகளிரணி பிரசாரக்குழு செயலாளர் தேன்மொழி உட்பட விக்கிரவாண்டி, திருக்கோவிலுார் தொகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.