
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: விழுப்புரம் மாவட்ட எஸ்.பி., சரவணன், நேற்று முன்தினம் இரவு விக்கிரவாண்டி டி.எஸ்.பி., அலுவலகத்தில் ஆய்வு செய்தார்.
அப்போது, 7 காவல் நிலையங்களில் பதியப்படும் குற்ற வழக்குகள், அபராதங்கள் குறித்து ஆய்வு செய்து, நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க ஆலோசனை வழங்கினார்.
டி.எஸ்.பி., நந்தகுமார், இன்ஸ்பெக்டர்கள் பாண்டியன், விஜயகுமார், மூர்த்தி, சுரேஷ்பாபு, சப் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், மணிகண்டன், கந்தசாமி, வெங்கடேசன், முத்துராஜ், விஸ்வநாதன், சிவசந்திரன் உடனிருந்தனர்.