/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மகாலக்ஷ்மி பிளாசாவில் ரத்த தான சிறப்பு முகாம்
/
மகாலக்ஷ்மி பிளாசாவில் ரத்த தான சிறப்பு முகாம்
ADDED : அக் 31, 2025 02:35 AM

விழுப்புரம்:  விழுப்புரத்தில் மஹாலஷ்மி பிளாசா நிறுவனர் ரமேஷின் 5ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, ரத்த தான முகாம் நடந்தது. இதில் மாவட்ட அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை டாக்டர் விஜயா மற்றும் குழுவினர் பங்கேற்றனர்.
மகாலக்ஷ்மி பிளாசா உரிமையாளர்கள் பிரகாஷ், வெங்கடேஷ், ராஜேஷ், மதன் குமார், அஸ்வின் குமார், யோகேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், அரசு வழக்கறிஞர் நாகராஜன், நோட்டரி பப்ளிக் வழக்கறிஞர் தேவேந்திரன், சேம்பர் ஆப் காமர்ஸ் மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன், பொதுச்செயலாளர் பிரேம் நாத், பொருளாளர் கலைமணி, நிர்மல்,  சரவணன், குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். ரத்த தானம் செய்த 200 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
முகாம் ஏற்பாடுகளை அசோக்குமார், பாஸ்கரன், மகாலக்ஷ்மி பிளாசா பி.ஆர்.ஓ., கந்தசாமி, பிரபாகரன் ஆகியோர் செய்திருந்தனர்.
இதேபோல்,வேலுார் மகாலக்ஷ்மி பிளாசா கலர்ஸ் துணிக் கடையில், நேற்று நடந்த முகாமில், 75 பேர் ரத்த தான முகாம் செய்தனர்.

