/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வார விடுமுறைக்கு சிறப்பு பஸ்கள்
/
வார விடுமுறைக்கு சிறப்பு பஸ்கள்
ADDED : மார் 07, 2024 01:12 AM
விழுப்புரம் : வார இறுதியையொட்டி, விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 550 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
இதுகுறித்து மேலாண் இயக்குநர் ராஜ்மோகன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
வார இறுதி நாளான வரும் 8 மற்றும் 9ம் தேதிகளில் பொதுமக்கள் கிளாம்பாக்கத்தில் இருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார், சிதம்பரம், விருத்தாசலம், திருவண்ணாமலை, போளூர் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்ல வசதியாக விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதலாக நாளை 250 பஸ்களும் , 9 ம் தேதி 300 பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பயணிகள் https://www.tnstc.in/home.html என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து இந்த சிறப்பு பஸ்களை பயன்படுத்தி கொள்ளலாம். பயணிகள் கூட்டம் குறையும் வரை தேவைக்கு ஏற்ப பஸ்களை ஏற்பாடு செய்யவும், பஸ் இயக்கத்தை மேற்பார்வை செய்திட அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.

