/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பயிர் காப்பீடு செய்ய இன்று சிறப்பு முகாம்
/
பயிர் காப்பீடு செய்ய இன்று சிறப்பு முகாம்
ADDED : நவ 14, 2025 11:21 PM
விழுப்புரம்: தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் பயிர் காப்பீடு செய்வதற்கான முகாம் இன்று நடக்கிறது.
விழுப்புரம் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செய்திக்குறிப்பு:
பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் பயிர் காப்பீடு திட்டத்தில் நெல்-2 பயிருக்கு காப்பீடு செய்ய இன்று 15ம் தேதி கடைசி நாள் என நிர்ணயிக்கப்பட்டுஉள்ளது.
எனவே, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர் கடன் பெற்ற விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க சிறப்பு முகாம் நடக்கிறது.
அந்தந்த தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் இன்று 15ம் தேதி முகாம் நடக்கிறது. இதனை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

