/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
டிச.,12ல் ஓய்வூதியர் குறைகேட்பு கூட்டம்
/
டிச.,12ல் ஓய்வூதியர் குறைகேட்பு கூட்டம்
ADDED : நவ 14, 2025 11:20 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் ஓய்வூதியர் குறைகேட்பு கூட்டம் வரும் டிசம்பர் 12ம் தேதி நடக்கிறது.
கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்டத்தில், ஓய்வு பெற்ற அரசு பணியாளர்களுக்கான ஓய்வூதியர் குறைகேட்பு கூட்டம், வரும் டிசம்பர் 12ம் தேதி காலை 10:30 மணிக்கு நடக்கிறது. விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கூட்டம் நடப்பதால், ஓய்வு பெற்ற அரசு பணியாளர்கள், தங்களது மனுக்களை இரட்டை பிரதிகளில், உரிய இணைப்புகளுடன் வரும் 26ம் தேதிக்குள், கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் (கணக்குகள்) நேரில் சமர்ப்பித்து பயன்பெறலாம்.

