UPDATED : அக் 03, 2026 12:00 AM
ADDED : அக் 02, 2026 04:26 PM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், வாக்காளர் பட்டியலில் விடுபட்ட இளைஞர்கள், முதல்முறை வாக்காளர்களின் பெயர்களை பதிவு செய்வதற்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.
கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
இந்திய தேர்தல் ஆணையமானது, வாக்காளர் பட்டியல் ‘சிறப்பு தீவிர திருத்தப் பணி’ (எப்.ஐ.ஆர்) ஏற்கனவே நிறைவடைந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், தொடர் திருத்த நடைமுறையின் கீழ், விடுபட்ட வாக்காளர்கள் மற்றும் இளம், முதல் முறையாகத் தகுதி பெறும் வாக்காளர்களை பதிவு செய்வதற்கான சிறப்பு முகாமினை, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் வாக்காளர் பதிவு அலுலவர்கள் மேற்கொள்ள வேண்டும்.
படிவம்–6 உடன் இணைக்கப்பட்டுள்ள ‘உறுதிமொழிப் படிவம்’, சிறப்பு தீவிர திருத்த கால கட்டத்தில் மட்டுமே பயன்படுத்தப்படும். சிறப்பு தீவிர திருத்தம் அல்லாத கால கட்டங்களில், ‘வாக்காளர் பதிவு விதிகள் 1960’ன் படி பொருந்தக்கூடிய படிவங்கள் பயன்படுத்தப்படும்.
தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, விழுப்புரம் மாவட்டத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்ட மற்றும் தகுதி வாய்ந்த இளைஞர்கள், முதல் முறை வாக்காளர்களின் பெயர்களை பதிவு செய்வதற்கு, விழுப்புரம் மாவட்டத்தில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
