/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு அதிநவீன செயற்கை கால் வழங்கும் சிறப்பு முகாம்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு அதிநவீன செயற்கை கால் வழங்கும் சிறப்பு முகாம்
மாற்றுத்திறனாளிகளுக்கு அதிநவீன செயற்கை கால் வழங்கும் சிறப்பு முகாம்
மாற்றுத்திறனாளிகளுக்கு அதிநவீன செயற்கை கால் வழங்கும் சிறப்பு முகாம்
ADDED : டிச 27, 2024 11:27 PM

விழுப்புரம் ; விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிநவீன செயற்கை உபகரணங்கள் வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடந்தது.
விழுப்புரம் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ், கை அல்லது கால் இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு, சர்வதேச தரம் வாய்ந்த அதிநவீன செயற்கை கால் செய்து வழங்கும் திட்டத்தின் கீழ் உதவி உபகரணங்கள் வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்காக, கை, கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு அளவீடு எடுக்கும் முகாம் நேற்று நடந்தது.
விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக வளாகத்தில் நடந்த முகாமில், மாவட்டத்தில் கால் மற்றும் கை துண்டிக்கப்பட்டு பாதித்து, செயற்கை கால் கோரி மனு செய்திருந்த மாற்றுத்திறனாளிகளுக்கு, நவீன இயங்கும் தன்மை கொண்ட செயற்கை அவயங்கள் செய்து வழங்க அளவீடு எடுக்கப்பட்டது.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணி தலைமை தாங்கினார்.
பேச்சு பயிற்சியாளர் அபிசேகா, செயல்திறன் உதவியாளர் முருகன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
சென்னையைச் சார்ந்த தனியார் நிறுவன முடநீக்கவியல் வல்லுனர்கள் குழு, கை, கால் இழந்த மாற்றுத் திறனாளிகளை அளவீடுகள் எடுத்தனர். 74 மாற்றுத்திறனாளிகள் அழைக்கப்பட்டிருந்தனர். இதில் 69 பேருக்கு அளவீடு எடுத்து தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் மதிப்பிலான, நவீன செயற்கை உபகரணங்கள் வழங்க அளவீடு எடுக்கப்பட்டுள்ளது. விரைவில், அவர்களுக்கு உபகரணங்கள் வழங்கப்படும் என்று மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் தெரிவித்தார்.