/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வீட்டுவேலை பணியாளர்கள் நலவாரியத்தில் பதிய சிறப்பு முகாம்
/
வீட்டுவேலை பணியாளர்கள் நலவாரியத்தில் பதிய சிறப்பு முகாம்
வீட்டுவேலை பணியாளர்கள் நலவாரியத்தில் பதிய சிறப்பு முகாம்
வீட்டுவேலை பணியாளர்கள் நலவாரியத்தில் பதிய சிறப்பு முகாம்
ADDED : அக் 16, 2024 10:03 PM
விழுப்புரம் : விழுப்புரம் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில், தமிழ்நாடு வீட்டுவேலை பணியாளர்கள் நல வாரியத்தில், தொழிலாளர்கள் பதிவு செய்ய சிறப்பு முகாம் நடக்கிறது.
விழுப்புரம் தொழிலாளர் உதவி ஆணையர் ராஜசேகரன் செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்ட தொழிலாளர்கள் நல வாரிய அலுவலகத்தில், வீட்டு வேலைகளில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கும் வகையில், அவர்களை அதிக எண்ணிக்கையில் நலவாரிய உறுப்பினர்களாக பதிவு செய்வதற்கு ஏதுவாக, சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு முகாம், விழுப்புரம் கே.கே.ரோடு, ஆறுமுகம் லே அவுட் பகுதியில் இயங்கும், தொழிலாளர் உதவி ஆணையர்(சமுக பாதுகாப்பு திட்டம்) அலவலகத்தில், தொழிலாளர்கள் நல வாரிய அலுவலகத்தில், காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை நடைபெறுகிறது.
இந்த முகாமில் பதிவு செய்வதற்கு, தொழிலாளர்கள் தங்களது ஆதார் அட்டை, குடும்ப அட்டை, செல்போன் எண் ஆகியவற்றுடன் நேரில் வருகை தந்து, உறுப்பினராக பதிவு செய்து, நலத்திட்ட உதவிகள் பெற்று பயன்பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.