/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இ.எஸ்., பள்ளிகளில் சிறப்பு விழா
/
இ.எஸ்., பள்ளிகளில் சிறப்பு விழா
ADDED : ஜன 12, 2025 10:21 PM

விழுப்புரம்; விழுப்புரம் இ.எஸ்., பள்ளிகளில் சிறப்பு விழா கொண்டாடப்பட்டது.
விழுப்புரத்தில் இ.எஸ்., கல்விக்குழுமம் பள்ளிகள் இ.எஸ்., லார்ட்ஸ் இண்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ., பள்ளி, இ.எஸ்., மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் இ.எஸ்., கலைக்கூடம் இயங்குகிறது. இந்த கலை கூடத்தில் இ.சி.ஏ., என்ற பாடப்புற செயல்களான கராத்தே, யோகா, சிலம்பம், நடனம், இசை, ஓவியம் ஆகிய கலைகள் ஆண்டுதோறும் கற்பிக்கப்படுகிறது.
இதில் பயிற்சி பெறும் மாணவர்கள் தங்களின் திறமைகளை வெளிகாட்டும் வகையில் இ.சி.ஏ., தினம் என்ற சிறப்பு நிகழ்ச்சி இரு பள்ளி மாணவர்களுக்கும் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், மாணவர்கள் பலரும் பங்கேற்று தங்களின் திறமைகளை பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் வெளிப்படுத்தினர்.
இந்த நிகழ்ச்சியோடு சேர்த்து, பொங்கல் விழாவும் கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் செல்வமணி தலைமை தாங்கினார்.
செயலாளர், முதல்வர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.