/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் அரசு மருத்துவமனையில் இன்று சிறப்பு மருத்துவ பரிசோதனை
/
விழுப்புரம் அரசு மருத்துவமனையில் இன்று சிறப்பு மருத்துவ பரிசோதனை
விழுப்புரம் அரசு மருத்துவமனையில் இன்று சிறப்பு மருத்துவ பரிசோதனை
விழுப்புரம் அரசு மருத்துவமனையில் இன்று சிறப்பு மருத்துவ பரிசோதனை
ADDED : ஜன 19, 2025 06:44 AM
விழுப்புரம்: விழுப்புரம் அரசு மருத்துவமனையில், இன்று சிறப்பு மருத்துவ முகாம் நடக்கிறது.
விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் பத்திரிக்கையாளர்கள் சார்பில் நடைபெறும் முகாமிற்கு, கலெக்டர் பழனி தலைமை தாங்குகிறார். முகாமை காலை 10:00 மணியளவில், அமைச்சர் பொன்முடி துவக்கி வைக்கிறார்.
எஸ்.பி., சரவணன், கூடுதல் கலெக்டர் ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், மருத்துவ பணிகள்இணை இயக்குநர் செந்தில்குமார், துணை இயக்குநர் ரமேஷ்பாபு, டி.ஆர்.ஓ., ஹரிதாஸ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
முகாமில், ரவிக்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் லட்சுமணன், அன்னியூர் சிவா, சிவக்குமார், முன்னாள் எம்.பி., கவுதமசிகாமணி, மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், சேர்மன் தமிழ்ச்செல்வி பிரபு, முன்னாள் சேர்மன் ஜனகராஜ் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
முகாமில், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், ரத்த பரிசோதனை, கண் பரிசோதனை, பல் பரிசோதனை, இ.சி.ஜி., பரிசோதனை மற்றும் பெண்களுக்கான கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை உள்ளிட்டவை மேற்கொள்ளப்படுகிறது.