/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
த.வெ.க., மாநாடு வெற்றி பெற கோவில்களில் சிறப்பு பூஜை
/
த.வெ.க., மாநாடு வெற்றி பெற கோவில்களில் சிறப்பு பூஜை
த.வெ.க., மாநாடு வெற்றி பெற கோவில்களில் சிறப்பு பூஜை
த.வெ.க., மாநாடு வெற்றி பெற கோவில்களில் சிறப்பு பூஜை
ADDED : அக் 26, 2024 08:22 AM

நாகப்பட்டினம் : விழுப்புரம் மாவட்டம், வி.சாலையில் நடைபெறவுள்ள த.வெ.க., மாநில மாநாடு வெற்றிப் பெற நாகை கோவில்களில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
நடிகர் விஜய் துவக்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு, நாளை 27ம் தேதி, விழுப்புரம் அடுத்த வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளது. இம்மாநாட்டை தீபாவளி பண்டிகையாக கொண்டாடும் ஆர்வத்தில் உள்ள அக்கட்சியினர், நாகையில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் பேனர்கள் வைத்தும், சுவர் விளம்பரங்கள் மூலம் விளம்பரம் செய்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று மாவட்ட தலைவர் சுகுமாறன், மகளிரணி செயலாளர் சுகன்யா முகுந்தன் தலைமையில் நிர்வாகிகள், நாகை, நீலாயதாட்சியம்மன் கோவிலில், மாநாடு வெற்றிப் பெற வேண்டி, சிறப்பு பூஜை நடத்தினர். அதே போல் அக்கட்சி நிர்வாகிகள் அவரவர் பகுதிகளில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.